கேள்விக்குறிகும் வழக்கறிஞர்களுக்கான தொழில் பாதுகாப்பு!

 *சென்னை உயர் நீதிமன்றம்*

*கொரோனா* *காலகட்டத்தில் பெண் வழக்கறிஞர் மற்றும்* *காவல்துறைக்கு* 

*இடையே நடந்த சச்சரவு* *சம்பந்தமான*

*வழக்கில் ஒட்டு மொத்த* *வழக்கறிஞர்களின்*

*மனதை புண்படுத்தும்* *விதத்தில்*

*கருத்து தெரிவித்து இருப்பது இன்று*

*தமிழகம் முழுவதும்* *வழக்கறிஞர்களிடையே*

*விவாத பொருளாக உள்ளது* 


*வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் ஒரு*

*அங்கம் என்பதும்* *நீதிபரிபாலனத்தில்*

*வழக்கறிஞர்களின் *பங்கு எவ்விதத்திலும்*

*குறைத்து மதிப்பிட முடியாத* *சூழ்நிலையில்*

*உள்ளது என்பதையும் உயர்நீதிமன்ற நீதிபதி*

*கருத்தில்* *கொள்ளவில்லை*


*காவல்துறைக்கு  கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் எவ்வாறு தவறாக* *பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதையும்*

*மனித உரிமை மீறல்கள் காவல்நிலைய* *மரணங்கள் என்று சமூகத்தில்* *காவல்துறையினரின் *அத்துமீறல்களை* 

*இதுவரை* *உயர்நீதிமன்றம் கண்டித்தது*

*இல்லை*


*ஆயுதங்களோடும் அதிகாரங்களோடும்*

*நீதிமன்றங்களின் ஆதரவோடும் *காவல்துறை*

*செயல்படும் பொழுது* 


*எவ்வித பாதுகாப்பும் இன்றி நீதிபதிகளின்*

*ஆதரவும் இன்றி நிராயுதபாணியாக*

*வழக்கறிஞர்கள் *மக்களின் உரிமைகளை*

*பாதுகாக்க* *நீதிமன்றங்களிலும் அதிகார வர்க்கத்திற்கு* *எதிராக போராடுவது *என்பது*

*எவ்வளவு சிரமம்* *என்பது*

*நீதிபதிகள்* *உணரவேண்டும்*


*வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகளை போலவும்*

*காவல்துறை போலவும் மாத வருமானம்*

*இல்லை*


*வங்கி கடன் இல்லை யாரிடமும் கையேந்தி*

*கடன் கேட்க முடியாது  *வழக்கறிஞர் தொழிலை*

*தவிர வேறு தொழில்* *செய்ய* *முடியாது*


*சுயமறியாதையோடு* *தன் குடும்பத்தை *நடத்தி*

*சமூகத்தில்* *கௌரவமாக* *நடைபோடுவது சவாலான விஷயம்*


*நீதிமன்றங்களில் மக்களின் உரிமைகளை*

*பாதுகாக்க போராடும் நடைமுறை மிக எளிதானது அல்ல* 

*மக்களின் பிரச்சனைகளை நீதிமன்றத்தில்*

*எடுத்து வைத்து அந்த* *வழக்கை நிருபிக்க*

*நீதிபதிகளுக்கு புரிய* *வைக்க  வழக்கறிஞர்கள்*

*படும் நாடு* *சாதாரணமானது அல்ல* 


*காவல்துறை தவறு செய்தால் அவ்வளவு*

*எளிதாக அவர்கள் மீது நீதிமன்றத்தில்* *நடவடிக்கை எடுக்க வழியுறுத்திவிட முடியாது*

*நீதிமன்றங்கள் எல்லா சூழ்நிலையிலும்*

*அதிகார வர்க்கத்திற்கு சாதகமாகவே* 

*நடந்து கொள்கின்றன* 


*காவல்துறைக்கு *எதிராக போராடும் வழக்கறிஞர்கள் தங்கள் உயிரை கூட*

*காப்பாற்ற முடியாமல் கொலை செய்யப்பட்ட*

*சம்பவங்கள் உண்டு*

*அந்த சம்பவங்களில்* *கூட தவறு செய்தவர்கள்*

*தண்டனைக்கு உள்ளானது இல்லை*


*மனித உரிமை நீதிமன்றங்களும்*

*தமிழ்நாட்டில்* *செயல்படுவதில்லை ஏன்*

*என்ற கேள்விக்கு பதிலில்லை* 


*நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவது மட்டுமே*

*வழக்கறிஞர் தொழில் அல்ல என்பதை*

*நீதிபதிகள் தயவு செய்து புரிந்து கொள்ளவேண்டும*


*எங்கெல்லாம் மனித உரிமைகள் மீறபடுகின்னவோ அங்கெல்லாம்* *வழக்கறிஞர்கள் தங்கள் குரலை உயர்த்த**முடியும்*


*எங்கெல்லாம் அநீதி நடைபெறுகிறதோ* 

*அங்கெல்லாம் வழக்கறிஞர்கள்* *நீதியை*

*பெற்று தர கேள்வி* *எழுப்ப உரிமை* *படைத்தவர்கள்*


*சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் நீதிபதிகளே*

*குடிசையின் வாயிலுக்கு வாருங்கள் அங்கு*

*தான் சமூக நீதி தேவைப்படுகிறது என்கின்ற*

**முன்னால் உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி*

*வீ ஆர் கிருஷ்ணய்யரின் கூற்றை நினைவு*

*கொள்ளுங்கள்*


*வழக்கறிஞர்கள் எல்லாம் ரவுடிகள் போலவும்*

*சமூக விரோதிகள் போலவும் சமூகத்தில்*

*சித்தரிப்பது ஜனநாயகத்தின்* *குரல்வலையை**

*நசுக்குவதற்க்கு* *சமமாகிவிடும்.*


*சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில்*

*காவல்துறை நடத்திய அராஜகத்தை நாம்*

*மறந்து விடவில்லை இன்றும் நாம்* *ஒவ்வொரு வருடமும் அன்றைய நாளை* *கருப்பு தினமாக*

*அனுசரித்து* *வருகிறோம் இதுவரை அந்த அராஜகங்களை* *நடத்திய *காவல்தஅராஜகங்களைஐ**மீத எவ்வித* *நடவடிக்கையும் *எடுக்கப்படவில்லை.*


*எத்தனை காவல்நிலைய *மரணங்களில்*

*கொலை வழக்காக* *பதிவு செய்து எத்தனை*

*காவல்துறை* *அதிகாரிகள் தண்டிக்கப்பட்டு*

*இருக்கிறார்கள்* 


*கீழமை நீதிமன்ற நீதிபதிகள் மேல் உயர்*

*நீதிமன்றங்களுக்கு அனுப்பட்ட  பல்வேறு*

*முறைகேடு சம்பந்தமான புகார்களில்* *விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு எத்தனை*

*நீதிபதிகள் தண்டனை வழங்கப்பட்டு சிறை*

*சென்றுள்ளார்கள்*


*மாண்புமிகு நீதிபதி சுபாஷன் ரெட்டி*

*அவர்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும்* *பொழுது கீழமை நீதிமன்ற நீதிபதிகள்* *மேல் 500 க்கு மேற்பட்ட*

*புகார்கள்* *வந்திருப்பதாக கூறினார்*

*அந்த புகார்கள்* *என்னவாயிற்று.*


*உயர்* *நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் மேல்*

*புகார் அனுப்பும் வழக்கறிஞர் மேலும் பொய் புகார்*

*அளித்ததாக நடவடிக்கை எடுக்க படவாய்ப்பு*

*உள்ளது என்ற அச்சத்தால் புகார்களை* *அனுப்ப*

*தயங்குகிறார்கள்*


*ஆக மக்களின் உரிமைகளை போராடி*

*பெற எவ்வித சமூக மற்றும்பொருளாதார* 

*பாதுகாப்பின்றி வழக்கறிஞர் தொழில் உள்ளது*

*என்பதை மாண்பு மிகு* *உயர்நீதிமன்ற*

*நீதியரசர்கள்* *புரிந்துகொள்ள வேண்டும்*


*வழக்கறிஞர் தொழிலை* *மட்டுமே நம்பி*

*சுமார் 80 சதவீத* *வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்*


*ஐந்தாயிரம் ருபாய் பத்தாயிரம் ருபாய்*

*கொடுத்துவிட்டு* *கட்சிக்காரர்கள் எதிர்பார்க்கும்*

*தீர்வுகள்* *எண்ணற்றவை* *அவர்கள் வழக்கறிஞர்களை தங்கள் *வேலையாட்களை*

*போல* *நினைக்கிறார்கள் தேவைபட்டால்*

*மனித வெடிகுண்டுகளாய் மாறி* *அதிகாரவர்த்திடமிருந்து அவர்களுடைய*

*உரிமையை பாதுகாக்க *வேண்டும் என்கின்ற*

அளவிற்கு* *அவர்களுக்கு *எதிர்பார்ப்புகள்*

*உள்ளன*.


*காவல்துறை , நீதிபதிகள் , மருத்துவர்,* *அமைச்சர்கள் இவர்கள் மீது குற்றச்சாட்டு*

*எழுந்தால் அவர்கள் மீது* *நடவடிக்கை எடுக்க*

*அவர்களை கைது* *செய்ய வழக்கு தாக்கல் செய்ய முன் அனுமதி* *தேவை என்ற *பாதுகாப்பு*

*இருக்கும் பொழுது*


*அவ்விதம் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல்*

*வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்வது*

*மரண கிணற்றில் வண்டி ஓட்டுவது போன்றது*

*என்பதை நாம் எப்படி நீதிபதிகளுக்கு*

*புரிய வைக்க போகிறோம்*


*வழக்கறிஞர் சட்டத்தில் *வழக்கறிஞர்களுக்கான தொழில் பாதுகாப்பு*

*விதிகளை ஏற்படுத்த உரிய சட்ட திருத்தம்*

*செய்யப்படவேண்டும்* 


*வழக்கறிஞர்கள் மேல் புகார்கள் வந்தால்*

*அந்த புகார்கள் மீது* *பார்கவுன்சில் முன்அனுமதி இன்றி வழக்கு தாக்கல்* *செய்யவோ கைது செய்யவோ கூடாது*

*என்ற சட்டத்திருத்தம் தேவை*


*வழக்கறிஞர்கள்* *ஒற்றுமை ஒன்றே*

*இவற்றை* *சாத்தியப்படுத்தும்*


*சே. அசோக் B.Sc.,B.L.,*

*வழக்கறிஞர்*

*சென்னை உயர் நீதிமன்றம்*

Comments

Popular posts from this blog

2017(2) CIVIL COURT CASES 695 (S.C.)SUPREME COURT OF INDIAKURIAN JOSEPH & R.BANUMATHI, JJ.Civil Appeal No.4615 of 2017 (Arising out of SLP(C) No.7670 of 2014), D/30.03.2017.